2023 ஆம் ஆண்டில் 17,526 சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.
ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும். அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை.
காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும்.
அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம். அந்த பணத்தை மிச்சம் செய்து கோட்டை கட்ட நாமே ஓட்டுவோம். இதனை கொஞ்சம் தவிர்த்தால் இன்னும் குறையும்.
பணக்கார வாகனங்கள். தொலைதூர பேருந்துகள் ஆர்வகோளாறு வாகனங்கள். மற்றவர்களைவிட நம் கார் தனித்து தெரிய வேண்டுமென ஹை பீம் வெளிச்சம். அதுவும் எதிரே வருபவர் நிலைகுலைந்து சாலையில் இருந்து இறங்குமளவு ஒரு சைக்கோதனமான இருக்கும். இதனை டிராபிக் போலிசார் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் ஹெல்மெட் மட்டுமே.
தமிழ்நாட்டில் நகரங்கள் உள்ளே மட்டும் தான் சாலைகள் மோசமாக இருக்கும். நகரத்தை தாண்டிவிட்டால் 90% சாலைகள் தெளிவாகவே இருக்கிறது. அழகாய் சொகுசாய் போகலாம். இல்லை நாங்க காட்டுமிராண்டிதனமாதான் போவோம்னா தயவு செஞ்சு மலைக்காட்டு பக்கம் போய் மலையில இருந்து கவுந்துகோங்க. சாலையில் சும்மா போய்கிட்டு இருக்கிற வாகனங்கள் மீது வேண்டாம். அப்புறம் விமான விபத்துக்கு வருத்தப்பட்டது உண்மைன்னா உங்கள் வாகனங்கள் மீது கொஞ்சம் கவனமா வைங்க. பாதி வண்டில ( காரோ பைக்கோ ) பெரிய பிரச்சினை இருந்துட்டேதான் இருக்கு. அத சமாளிச்சு தான் ஓட்டிகிட்டு இருக்கிங்க. அப்டி கவனிசா இந்த விபத்தில செத்தவங்களுக்கு கொஞ்சம் புண்ணியமா இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக